சஷி வீரவன்ச விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வருகை
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_40.html
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச இன்று (04) காலை 9.30 மணிக்கு நிதி மோசடி குற்றத்தடுப்பு விசாரணைப் பணியகத்திற்கு ஆஜரானார்.
(சொத்துகள் வாங்கியமை தொடர்பில்) ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெறும் பொருட்டே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தற்போது விசாரணைகள் நடைபெறுகின்றன. அவருடன் கணவர் விமல் வீரவங்ச மற்றும் கட்சி முக்கியஸ்தர் முஹம்மட் முஸம்மில் ஆகியோரும் அங்கு வருகை தந்துள்ளனர்.
இது தொடர்பில் நேற்று முன் தினமே அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக விசாரணைப் பணியகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

