ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் 45 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/06/45.html
ஈராக்கிய அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் புதிதாக நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளனர்.
பலுஜா மற்றும் சமாரா நகர்களை இணைக்கும் வீதியில் அமைந்துள்ள தர்தார் பிரதேசத்திலுள்ள பொலிஸ் தலைமை யகத்தில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 3 வாகனங்களை செலுத்தி வந்து தற்கொலைக் குண்டுதாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பலியானவர்களில் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் உள்ளடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக அன்பர் மாகாணத்தில் அரசாங்கப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களால் மேற்படி 21 ஆவது படையணிப் பிரிவொன்றின் தலைமைய கத்திலிருந்த ஆயுதக் களஞ்சியசாலையில் பாரிய வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்த உயர் மட்ட அதிகாரி களில் பிரிகேடியர் ஜெனரல் மூஸா ஹைதர் உள்ளடங்குகிறார்.
