நேபாளத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை

நேபாள அரசு மேகி நூடுல்சின் விற்பனைக்கும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடைவித்து உத்தரவிட்டுள்ளது. மேகி நூடுல்சில் உடலுக்கு கேடு விளைவிக்கும் காரீயமும், சுவை கூட்டும் மோனோ சோடியம் குளூட்டோமேட் ரசாயனமும் அதிக அளவு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

 டெல்லி, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் மேகி நூடுல்ஸ் விற்பனையை தடை செய்துள்ளது. தற்போது ராணுவத்திலும் மேகி நூடுல்சை சாப்பிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் நேபாளத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விவசாயத்துறை அமைச்சக செயலாளர் உத்தம் குமார் கூறும்போது ”இந்தியாவில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை தொடர்ந்து நேபாள அரசும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடைவித்து உத்தரவிட்டுள்ளது. விரைவில் இது பற்றி விளக்க அறிக்கை வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார். 

நேபாளத்தில் மேகி நூடுல்ஸ் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. மேகி நூடுல்சை சாப்பிட்டால் நோய் அபாயம் ஏற்படும் என தெரிய வருவதால் உலகம் முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


Related

Interest 4411943873716742115

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item