பாகிஸ்தானில் வெயிலுக்கு பலியான 50 பேரின் உடல்கள் ஒரே நேரத்தில் அடக்கம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/50_27.html
பாகிஸ்தானில் இன்னும் கோடை வெயில் வாட்டி, வதைத்துவரும் நிலையில் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கராச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் உச்சகட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது.
இந்த வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் கடந்த ஒருவார காலத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சிந்து மாகாணத்தில் மட்டும் வெயிலின் தாக்கத்துக்கு 1200 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
வெயிலுக்கு பலியான 50 பேரின் உடல்களை கேட்டு யாறும் வராததை அடுத்து, தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அனைத்து உடல்களும் உரிய மரியாதையுடன் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.
