சமல் தலைமையில் இன்று கட்சி தலைவர்கள் கூட்டம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_33.html
20 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்தைப் போன்றே எதிர்க்கட்சிகள் சிலவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, மாதுலுவாவே சோபித தேரர் தலைமையிலான சமூக நீதிக்கான அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் 20 ஆம் திருத்தச் சட்ட யோசனையை ஒத்தி வைக்குமாறு கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அரசாங்கம் தேர்தல் முறைமை மாற்றம் குறித்து விவாதம் நடாத்தவும் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் இன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
