மீளதிருத்தப்பட்ட புதிய ஓய்வூதிய தொகை வழங்க ஏற்பாடு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_200.html
2006ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்றவர்களின் ஓய்வூதிய கொடுப்பனவும், 2006ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வுபெற்றவர்களின் ஓய்வூதியத்தொகையுடன் ஒப்பிட்டு ஓய்வூதியதொகை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜுலை மாதம் ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
குறித்த காலப்பகுதிக்கு முன்னரும், பின்னரும் ஓய்வூதியத்தை பெற்றவர்கள் தமது கொடுப்பனவில் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதனை ஒரு சமூக அநீதியாக கருதி, 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் எதிர்வரும் மாதம் தொடக்கம் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

