தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பின்னர் மூதாட்டியை சுட்டுக் கொன்ற இஸ்ரேலிய இராணுவம்

இஸ்ரேலியா ராணுவம் காஸா மீது நடத்திய தாக்குதலின் போது தாகத்தில் தவித்த மூதாட்டி ஒருவருக்கு தண்ணீர் கொடுத்து பின்னர் அவரது தலையில் சுட்டுகொன்ற புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காஸாமுனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்றுவந்தது.

இஸ்ரேல் 51 நாட்கள் நடத்திய இந்த போரில் 2200 பாலஸ்தீனியர்கள் கொல்லபட்டனர் என்றும் 11 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் ஐநா மேற்கொண்ட முயற்சியின் பேரில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில் ஹாலியா அபு ரிடா (74) என்ற மூதாட்டி குஸா பகுதியில் கான் யூனிஸ் நகரின் கிழக்குபகுதியில் வசித்து வாந்துள்ளார்.

காசாப் பகுதியில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலின் போது அங்கிருந்த ஹாலியா அபு ரிடா தாகத்தால் தவித்து உள்ளார்.

இதைப்பார்த்த இஸ்ரேலிய வீரர் ஒருவர் அவருக்கு தனது பாட்டிலில் இருந்த தண்ணீரை கொடுத்து உள்ளார். பின்னர் இதனை புகைப்படமும் எடுத்து கொண்டார்.

இந்நிலையில் ஒரு மீட்டர் தூரம் சென்ற அவர் அந்த பெண்ணின் நெற்றியில், துப்பாக்கியை வைத்து சுட்டு உள்ளதாக பாலஸ்தீன தகவல் மையம் செய்தி வெளியிட்டு உள்ளது.

முதலில் இஸ்ரேலிய வீரர்கள் மூதாட்டிக்கு தண்ணீர் வழங்குவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு போரின் போது தாங்கள் மனித தன்மையுடன் நடந்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தான் அல் அக்ஸா டிவி செய்தியாளர் அகமது குதா என்பவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது தான் கண்ட காட்சி என இதுகுறித்து வர்ணித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆக்கிரமிப்பின் போது ஒரு இஸ்ரேல் வீரர் ஒரு முதிய பெண்ணை அணுகி தண்ணீர் கொடுத்தார், அதை மற்றொரு வீரர் புகைப்படம் எடுத்தார்.

பின்னர் அவர் அந்த பெண்ணின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சுட்டு உள்ளார் என்று கூறியுள்ளார்.


Related

World 7439332636729352175

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item