தென் மாகாண சபை அமைச்சர் உப்புல் பிணையில் செல்ல அனுமதி
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_14.html
பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தென் மாகாண சபை அமைச்சர் டி.வி.உப்புல் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய தலைமையில் இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றது.
25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையும், 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
