ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி வரை ஒத்திவைப்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/9.html
முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்து அதற்குரிய 5 இலட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாவை பணத்தை செலுத்தாமையின் காரணமாக இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

