ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகத்தினை 50 வீதத்தினால் குறைக்க தீர்மானம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/50.html
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் எரிபொருள் விநியோகம் 50 வீதத்தினால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஒயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலைக் குறைப்பு தொடர்பில் வரிச் சலுகை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்த போதிலும் அவ்வாறு சலுகை வழங்கப்படவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், நாட்டில் போதியளவு எரிபொருட்கள் காணப்படுவதாகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு கிடையாது எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. -et
