2014இல் இலங்கை அரசின் கடன் 7 டிரில்லியன்! ஹர்ஷ டி சில்வா தகவல்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/2014-7.html
2014ம் ஆண்டு இறுதியில் இலங்கை ஏழு டிரில்லியனுக்கும் அதிகமான தொகையை கடனாக பெற்றுள்ளதாக பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று தனது முகப்புத்தக வலைதளத்தில் இது தொடர்பில் பதிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
7 டிரில்லியன், 390 பில்லியன், 899 மில்லியன் ரூபாவை இலங்கை கடனாக பெற்றுள்ளது.
2014ம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் ஒரு குடும்பத்தின் கடன் ஒரு மில்லியன் 4 இலட்சத்து 29 ஆயிரத்து 920 ரூபா என அவர் தனது முகப்புத்தகத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கின் மேன்ஹெட்டனில் அமெரிக்கா தேசிய கடன் கடிகாரம் ஒன்று காணப்படுகின்றது.
இதில் அமெரிக்க தேசிய கடன் தொகை மற்றும் ஒரு குடும்பத்தின் பங்கு என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
இது போன்றதொரு கடிகாரம் கொழும்பு நகரத்திற்கும் தேவை என பிரதி அமைச்சர் தனது முகப்புத்தக கணக்கில் பதிவு செய்துள்ளார்.

