கானா தலைநகரில் பெற்றோல் நிலையத்தில் தீ அனர்த்தம்; 150 பேர் உயிரிழப்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/150.html
கானாவின் தலைநகர் அக்ராவிலுள்ள பெற்றோல் நிலையமொன்றில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தில் சிக்கி 150 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
அந்நகரில் இரு நாட்களாக அடை மழை காரணமாக இடம்பெற்ற வெள்ளத்தால் பலர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீ அனர்த்தத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் வெள்ளம் காரணமாக தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோல் நிலைய தீ அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களைத் தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால் உயிரிழந்தவர்கள் தொகை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி ஜோன் மஹாமா தீ அனர்த்தத்திற்குள்ளான பெற்றோல் நிலையம் அமைந்துள்ள பிராந்தியத்திற்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார். -VK

