பசிலின் மனு நாளை விசாரணை
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_73.html
சட்ட ரீதியற்ற முறையில் கைது செய்து தற்பொழுது சிறையில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுதலை செய்யுமாறு வேண்டி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபஷை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மீதான மனுவின் மேலதிக விசாரணைகளை நாளைக்குத் தள்ளிப் போட உயர் நீதீமன்றம் தீர்மானித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன், பிரியசாத் டேப், ரோஹினதி மாரசிங்க, ஆகியோர் முன்னிலையில் இன்றைய முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
சட்டத்தரணி சனத் விஜேவர்தனவினால் முன்வைக்கப்பட்ட இந்த முறைப்பாட்டில், எதிர்வாதிகளாக பிரதமர், அமைச்சரவை, நிதி மோசடி தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளன.

