நோர்வே 8,000 சிரியா அகதிகளை ஏற்க ஒப்புதல்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/8000.html
சிரியாவைச் சேர்ந்த 8,000 அகதிகளை, 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஏற்றுக்கொள்ள, நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இத் தீர்மானத்திக்கு நோர்வேயின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் நேற்று இணக்கம் கண்டதைத் தொடர்ந்து, அதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இவ்வாண்டு, 2,000 சிரியா மக்களை ஏற்றுக்கொள்ள, நோர்வே திட்டம் கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டும், 2017-ஆம் ஆண்டும், அது வருடத்துக்கு மூவாயிரம் அகதிகளை ஏற்றுக்கொள்ளவிருக்கிறது.
-et
