‘விண்டோஸ் 10’ ஜூலை 29ல் வெளியீடு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/10-29.html
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சமீபத்திய, வசதிகள் அதிகரிப்பட்ட ‘விண்டோஸ் 10’ வெர்சன் இயங்குதளத்தை ஜூலை 29-ம் திகதி உலகம் முழுவதும் 190 நாடுகளில் வெளியிடுகிறது.
இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பில், உலகம் முழுவதும் 40 லட்சம் மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு 150 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்காக விண்டோஸ் 10 தயார் செய்யப்பட்டுள்ளது.
கணினி தொழில்நுட்பத்தில் புதிய சகாப்தத்தை படைத்து, புதிய தலைமுறையை இது உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, விண்டோஸ் 7 மற்றும் 8.1 வெர்சன் பயன்படுத்துவோர்கள் வெளியீட்டு நாளன்று, விண்டோஸ் 10 வெர்சனை இலவசமாக அப்கிரோடு செய்யலாம். கடந்த 29 ஆண்டு கால பயணத்தில், இந்த வெர்சனுடன் விண்டோஸ் தொழில்நுட்பத்தை நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
இதில் எக்ஸ்புளோரருக்கு பதிலாக கோர்டானா எனும் குரல்வழி உதவி செயலி பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
