வில்பத்துவில் காடழிப்பு நடைபெறவில்லை - சம்பிக்க ரணவக்க
http://weligamanewsblog.blogspot.com/2015/05/wilpattu-national-park.html
தற்பொழுது அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் முகமாக அமைச்சர் பாட்டலீ சம்பிக்க ரணவக்க கருத்துத் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் முகமாகவே அவர் தனது கருத்துக்களை வெளியிட்டார். அமைச்சர் கூறுகையில்,
"வில்பத்து தேசிய பூங்காவில் எந்த விதமான சட்ட விரோதக் குடியிருப்புகளும் அமைக்கப்படவில்லை. வில்பத்துவிற்கு அருகில் உள்ள சரணாலயப் பகுதியிலேயே கட்டுமான நடவடிகைகள் இடம் பெற்றுள்ளன. எனினும் வனவிலங்குப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி இவ்விடத்திலும் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள முடியாது.
முன்னாள் சூழல் அமைச்சர் என்ற வகையில் நான் வில்பத்துவின் எல்லாப் பகுதிகளுக்கும் பயணித்துள்ளேன். அங்கு எந்த விதமான சட்ட விரோத நிர்மாணங்களும் இல்லை. இவர்கள் கூறும் இந்த நிரமாணப் பணிகள் சரணாலயப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளன.இதனால் வில்பத்து தேசிய வனத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த சரணாலயப் பகுதிகள் சில சந்தர்ப்பங்களில் மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படுகின்றது. ஆனால் அதற்கு வனவிலங்குப் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி பெறுதல் அவசியம்"
எனத் தெரிவித்தார்.
