"பொது பல சேனா தேஷபாலன பெரமுன" - BBS இன் புதிய கட்சி?
http://weligamanewsblog.blogspot.com/2015/05/bbs.html
பொது பல சேனாவின் அரசியல் கட்சிக்கு "பொது பல சேனா தேஷபாலன பெரமுன" என பெயர் சூட்டப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கட்சியில் குருனாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரும் இணைந்து கொள்ள உள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன் தலைமைப் பொறுப்பு மேற்கூறப்பட்ட பிரதியமைச்சருக்கும் செயலாளர் பதவி ஞாசாரவுக்கோ அல்லது பொது பல சேனாவின் வேறொரு உறுப்பினருக்கோ வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதே நேரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சிறு கட்சிகள் சிலவும் பொதுபல சேனாவுடன் கூட்டமைப்பு அமைக்க ஏற்பாடாகி இருப்பதாக பொது பல சேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்குத் தாம் அழைப்பு விடுக்கவில்லை என பொது பல சேனா தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
