MURDER: குவைட்டில் இலங்கைப் பெண் தாதி படுகொலை

குவைட் நாட்டில் இலங்கையைச் சேர்ந்த 31 வயது பெண் தாதி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடன் பிரச்சினை ஒன்றே இதற்குக் காரணம் எனத் தெரிய வருகின்றது.

தன்னிடம் பெற்ற கடனைத் திருப்பி ஒப்படைக்காததால் குறித்த பெண்ணைத் தான் கொலை செய்ததாக கொலையாளியான இந்தியப் பிரஜை பொலிஸாருக்கு வாக்கு மூலமளித்துள்ளார்.

பணிக்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மறைந்திருந்த இந்தியர், தாதியின் முதுகில் இரு முறை கூரிய ஆயுதத்தில் தாக்கியுள்ளார். இதன் காரணமான குறித்த தாதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குவைத் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Related

Local 4691106418849201592

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item