ஹிருவைத் தொடர்ந்து இன்று TNL இலும் ரிஷாத் பத்தியுத்தீன்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/tnl.html
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் திட்டமிட்டு சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் அது பற்றிய தெளிவினை வழங்க அமைச்சர் ரிஷாத் பத்தியுத்தீன் அண்மையில் ஹிரு தொலைக்காட்சியின் "பலய" நிகழ்சியில் பங்கேற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு TNL அலைவரிசையில் நடைபெறவுள்ள "ஜனஹன்ட" நிகழ்ச்சியிலும் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது.
தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கான சரியான தீர்வு கிடைக்கவேண்டியுள்ளதாலும் அங்குள்ள நிலவரத்தை தென்னிலங்கை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
