சவூதியிலும் ஆரம்பம் - ஜும்மா வேளையில் குண்டுத் தாக்குதலில் பலர் பலி (PHOTOS)
http://weligamanewsblog.blogspot.com/2015/05/photos.html
சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அல்-குவடாக் நகரில் இன்று நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலர் மரணமாகியுள்ளனர். அங்குள்ள இமாம் அலி மசூதியில் ஜும்மாத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் குண்டை வெடிக்க வைத்துள்ளார். இதனால் பலர் மரணமாகியும் காயமடைந்தும் உள்ளனர்.
குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போது சுமார் 150 பேர் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாகவும் இதில் 20 தொடக்கம் 30 வரையானவர்கள் மரணமாகியிருங்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாங்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது குண்ட் வெடிக்க வைக்கப்பட்டது என அங்கு தொழுத ஒருவர் ரொய்ட்டர் செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார்.



