யாழ்ப்பாணத்தில் இனி ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது - நீதிமன்றம் தடை உத்தரவு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_619.html
யாழ்ப்பாணம் நகரில் இனி எந்த ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட முடியாது என நீதி மன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரிரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தை கருத்தில் கொண்டு பிரதேசத்தில் அமைதியை நிலை நாட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் குமாரவேலு மானிப்பாய் தலைமை தாங்கும் மக்கள் சக்தி அமைப்பு, யாழ்ப்பாண பெண்கள் சங்கம் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சஷிதரன் ஆகியோருக்கே இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
