சிரியா - இராக் இறுதி எல்லைக்கடவையும் இஸ்லாமிய அரசு வசம்

இராக்கிலும் சிரியாவிலும் தாக்குதல்களை தொடர்ந்து வருகின்ற இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள், அரசாங்கத்தின் வசம் இருந்த, இரு நாடுகளுக்கும் இடையிலான, இறுதி எல்லைக் கடவையையும் கைப்பற்றிவிட்டார்கள்.

இராக்கில் கடந்த ஞாயிறன்று ரமாடி நகரை கைப்பற்றிய இஸ்லாமிய அரசு, ஹப்பானியாவுக்கு வெளியே, ஷியா ஆயுதக்குழுக்கள் சண்டைக்காக குவிந்துவந்த அரசாங்க பாதுகாப்பு பகுதியை உடைத்துவிட்டார்கள்.

தாம் ஏற்கனவே கைப்பற்றியுள்ள, ஃபலுஜாவை நோக்கி ஜிகாதிகள் இப்போது கிழக்காக முன்னேறி வருகிறார்கள். தலைநகர் பாக்தாதும் அதே திசையிலேயே இருக்கிறது.

சிரியாவில் இஸ்லாமிய அரசு தாம் கைப்பற்றிய பால்மெய்ராவில் ஸ்திரப்படுத்தி வருகிறார்கள்.


Related

World 3673243698776726984

Post a Comment

emo-but-icon

item