சஜின் வாஸ் இன்றைய தினம் கைது செய்யப்படுவார்?
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_70.html
இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாவான சஜின் வாஸ் குணவர்தன இன்றைய தினம் கைது செய்யப்படுவார் என பொலிஸ் தலைமையகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி காரியாலயத்தில் நடை பெற்ற முறைகேடுகள் சம்பந்தமாக விசாரணை நடத்தவே அவர் இன்று வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பி.ப 1.30 மணியளவில் பிரபல சிங்கள ஊடகமொன்று பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பொன்றினை ஏற்படுத்திய போது சஜின் வாஸ் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
