JUST IN: பசிலுக்கு திடீர் சுகயீனம் - இருதயப் பிரிவிற்கு மாற்றம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/just-in_19.html
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பசில் ராஜபக்சவிற்கு நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஹிந்தவின் தோல்வியின் பின்னர் வெளி நாடு சென்றிருந்த பசில், நாடு திரும்பியவுடன் கைது செய்யப்பட்டு, பின்னர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
