கிரிக்கட்டில் துடுப்பாட்டக்காரர்களது கைகளைக் கட்டும் புதிய சட்டங்கள் பரிந்துரைப்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_380.html
ஒரு நாள் போட்டிகளில் துடுப்பாட்டக்காரர்களின் கைகளைக் கட்டும் வகையிலான இரண்டு பரிந்துரைப்புக்கள் ICC இடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் இந்திய சுழல் பந்து வீச்சாளரான அனில் கும்ப்லேயின் தலைமையிலான ICC இன் குழுவினரே இந்த பரிந்துரைப்புக்களை முன்வைத்துள்ளனர்.
அதில் முதலாவதாக முதல் 10 ஓவர்களில் உள்ள பவர் பிலே (Power Play) இனை நீக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 41ம் ஓவர் தொடக்கம் 50 வது ஓவர் வரை உள்வட்டத்துக்கு வெளியே 4 வீரர்களுக்குப் பதிலாக 5 வீரர்களைக் களத்தடுப்பில் ஈடுபடுத்த முடியுமான வகையில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது உள்ள நிலை துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் இதனால் பந்து வீச்சாளர்கள் பெரியளவில் திணறடிக்கப்படுவதாகவும் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட சட்டங்கள் அமுல்படுத்தப்படுமிடத்து டிவிலியர்ஸ், மெக்ஸ்வெல் மற்றும் கேல் போன்றோர் மீது பந்து வீச்சாளர்களும் நெருக்கடியைக் கொடுக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
