BREAKING: சஜின் வாஸ் கைது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/breaking.html
ஜனாதிபதி செயலகத்தின் வாகங்களை முறைகேடாகப் பாவித்தமை தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ள சஜின் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வரவழைக்கப்பட்டிருந்தார்.
காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் முன்னள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தவராகும்.
இவர் ஜனாதிபதி செயலகத்துக்கு உரித்தன 22 வாகனங்களை முறைகேடாகப் பாவித்துள்ளார் என பொலிஸார் கூறினர்.
