என்னைக் கைது செய்யாதீர்கள் - கெஞ்சும் கோட்டாபய
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_91.html
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை முறைகள் தனது மனித உரிமையை மீறும் செயல் எனக் கூறி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகின்றது.
தன்னைக் கைது செய்யும் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையிலான தடையுத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோட்டாபய உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சரவை மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
