Breaking News: நேபாளத்தில் சற்று முன்னர் 7.4 அளவிலான இன்னொரு பாரிய நில நடுக்கம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/breaking-news-71.html
சற்று முன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) நேபாளத்தில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் நேபாளத்தின் தலை நகர் காத்மண்டுவிலும் இந்தியாவின் தில்லியிலும் உள்ள மக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடங்களில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 30 செக்கன்கள் நீடித்த இந்த நில அதிர்வு இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நில நடுக்கம் சம்பந்தமான சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
எவரெஸ்ட் மலை அடிவாரத்தில் 10 km ஆழத்திலேயே இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 அளவிலான நில அதிர்வு காரணமாக 8000க்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
