நவ்ஸர் பவுஸி கைது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_987.html
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பவுஸியின் மகனும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நவ்ஸர் பவுஸி கைது செய்யப்பட்டுள்ளார். 2012ம் ஆண்டு ஒருவருக்கு துப்பாக்கி முனையில் மரண அச்சுருத்தல் விடுத்தமை சம்பந்தமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நவ்ஸர் பவுஸி துப்பாக்கி ஒன்றினைக் காட்டி தன்னை அச்சுருத்தியதாக கருவாத்தோட்ட பொலிஸாரிடம் வர்த்தகர் ஒருவர் முறையிட்டிருந்தார். இதனால் நவ்ஸர் பவுஸியைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
