தந்தை செலுத்திய பஸ்ஸிற்கு 7 வயது மகள் பரிதாபமாக பலி (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2015/05/7_12.html
பத்தேகம பிரதேசத்தில் இன்று காலை நடந்த விபத்தொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். பத்தேகம கிறிஸ்துதேவ மகளிர் வித்தியாலயத்தில் 2ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மரணமான மாணவியின் தந்தையே குறித்த பஸ்ஸை செலுத்தியுள்ளார் எனத் தெரியவருன்றது.
அவசரமாக பிரேக்கினைப் பிடித்த சந்தர்ப்பத்தில் பஸ்ஸினுள் இருந்த மாணவி வெளியே வீசப்பட்டு பின் சில்லுக்குள் சிக்கியதாக சமபவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.




