பொன்சேகாவும், சம்பிக்கவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் இணையவுள்ளனர்?
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_981.html
எதிர்வரும் பொது தேர்தலின் போது ஜாதிக்க ஹெல உறுமய மற்றும் ஜனநாயக கட்சியை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மூவரும் இணைந்து கலந்துரையாடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்காக இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, இலங்கை மக்கள் கட்சி மற்றும் தேச விமுக்தி ஜனதா கட்சி இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடதக்கது.
