பாக்கிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றது சிம்பாப்வே - கடும் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_793.html
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.
அதிருஷ்டவசமாக, இலங்கை விளையாட்டு வீரர்கள் காயமின்றி தப்பினர். இந்த சம்பவத்துக்கு பிறகு கடந்த 6 ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யவில்லை.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு டி.வி., ஔிபரப்பு வருமானம் உட்பட பல்வேறு வகைகளில் ரூ. 760 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் செல்ல சம்மதித்தது.
இரு அணிகள் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் லாகூரில் நடக்கவுள்ளது.
தங்கள் நாட்டுக்கு வரும் ஜிம்பாப்வே வீரர்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் பாகிஸ்தான் அரசு கவனமாக இருக்கிறது.
இதற்காக மொத்தம் 3000 பொலிசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஹொட்டல் மற்றும் மைதானங்களில் பாதுகாப்பிற்கு அமர்த்தப்படுகிறார்கள்.
மேலும், ஹெலிகொப்டர் மூலம் பொலிசார் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
தவிர இத்தொடருக்காக ரூ. 6.33 கோடி வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
