ஆறு வருடங்களுக்குப் பின்னர் தாய் நாட்டில் முதலாவது தொடரை வென்றது பாக்கிஸ்தான்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_977.html
சிம்பாப்வேயுடனான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 போட்டித் தொடரை 2-0 என்ற ரீதியில் பாக்கிஸ்தான் அணி வெற்றி கொண்டது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி நேற்று லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களைக் குவித்தது. இந்த ஓட்ட எண்ணிக்கையை பாக்கிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து எட்டி போராட்டத்துடனான வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியிலும் பாக்கிஸ்தானின் முக்தார் அஹமட் அரைச்சதம் பெற்றார். அவர் 40 பந்துகளை எதிர் கொண்டு 62 ஒட்டங்களைப் பெற்றார். போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் முக்தார் அஹமட் தெரிவானார்.
இலங்கை அணி மீதான பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து 6 வருடங்களின் பின்னர் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு அணி பாக்கிஸ்தானுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
