இலங்கை மகளிர் கிரிக்கட்டில் பாலியல் லஞ்சம் - ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவிப்பு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் சேர வீராங்கனைகளிடம் அதிகாரிகள் பாலியல் லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக புகார் வந்தது.

இதனை விசாரிக்க கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நிமல் திஸ்சநாயகே தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் விசாரணையில் மகளிர் கிரிக்கெட் அணி நிர்வாகிகள் பலர், வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க நேற்று கூறியுள்ளார்.

மேலும், விரைவில் தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Related

Sports 7247957206663816552

Post a Comment

emo-but-icon

item