புங்குடுதீவு மாணவி கொலை: மஹிந்தவின் இனவாத சிந்தனை கண்டிக்கப்படவேண்டியது

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்டதனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனவாத சிந்தனையுடன் நோக்குவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொரு விடயமென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

மாணவியின் படுகொலை சம்பவத்தை உலகமே அனுதாபத்துடன் நோக்கும் இத்தருணத்தில், நாட்டின் முன்னாள் ஜனாதிபதியொருவர் இச்சம்பவத்தை இனவாதத்தை தூண்டும் பகடைக்காயாக உபயோகித்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகுமென்றும் அமைச்சர் விஜயதாச கூறினார்.

இதேவேளை நீதிமன்ற விசாரணைகளை துரிதப்படுத்தி தீர்ப்பினை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கையெடுக்கப்படு மெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசப்பற்றுடைய எந்தவொரு நபராலும் இதுபோன்ற மிலேச்சதனமான செயற்பாடுகளை தாங்கிகொள்ள இயலாது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ, தான் இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி என்ற உணர்வின்றி இது குறித்து மிகவும் இழிவானதும் கீழ்த்தர மானதுமான கருத்துக்களை வெளி யிட்டுள்ளார். நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்தி குழப்பநிலையை உருவாக்க வேண்டுமென்பதே அவரது ஒரே குறிக்கோளாகும். ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சியிலிருக்கும்வரை மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோ மென்றும் அவர் தெரிவித்தார்.

மாணவியின் சடலம் கிடைத்ததும் இதனை தாங்கிக்கொள்ள இயலாத பொதுமக்கள் கோபத்தில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற சம்பவத்தை இனவாதரீதியில் நோக்குவது தவறு ஆகும். இது மனித சுபாவம் இதனை கட்டுப்படுத்தி வழிநடத்துவது தான் எமது கடமை. அனைத்து தரப்பினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பினை நாம் முறையாக முன்னெடுத்துள்ளோம்.

இராணுவ தலையீடு இன்றி பொலிஸாரின் ஒத்துழைப்பினை மாத்திரம் கொண்டு தாம் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், விஜயகலா மகேஸ்வரன், ரவூப் ஹக்கீம் ஆகியோரும் தமிழ் ஊடகங்களும் திருப்தியினை வெளியிட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு பொதுமக்களால் கல்லெறியப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருக்குமாகவிருந்தால் அது விசாரணைகளின் முடிவில் உறுதியாகும். இக்குற்றத்திற்கு வழங்க கூடிய ஆகக் கூடிய தண்டனையாகவே 130 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ள கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று தகவல் திணைக்களத்தில் நடத்தப்பட்ட செய்தி யாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டு மஹிந்த ராஜபக்ஷவினால் கூறப்பட் டிருக்கும் கருத்தினை வன்மையாக கண்டித்தனர்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி புரிந்த கடந்த 10 வருடங்களுக்குள் 26 ஆயிரத்து 936 குற்றச் செயல்கள் தொடர்பில் வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 11 ஆயிரத்து 510 வழக்குகளின் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறினார்.

மேலும் இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புபட்டவர்களுக்கு ஆகக்கூடிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுவது உறுதியானபோதும் விசாரணைகளை துரிதப்படுத்த முன்னுரிமை கொடுக்கப்படு மெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


Related

Local 7592778031315392706

Post a Comment

emo-but-icon

item