மைத்திரி – மகிந்தவுக்கு இடையிலான சந்திப்பு இனி இடம்பெறாது: விமல் வீரவன்ச
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_917.html
முன்னாள் ஜனாதிபதிக்கும், தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இனி இடம்பெறாதென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகச்விற்கு இடையிலான சந்திப்புக்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாது எனினும் இரு தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்புகள் இடம்பெறலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனி எந்த ஒரு சந்தர்ப்பங்களிலும் முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகளின் சந்திப்புகள் இடம்பெறாதென்பது உறுதி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
