பில் ஹியுஸின் மரணம் சம்பந்தமாக விசாரணை ஒன்றை நடத்த ஆஸி. கிரிக்கட் சபை முடிவு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_964.html
அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பில் ஹியுஸின் மரணம் சம்பந்தமாக பூரண விசாரணை ஒன்றை நடத்த அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.
எனினும் இந்த விசாரணைகளின் நோக்கம் யாரின் மீதும் குற்றம் சுமத்துவதல்ல என்றும் இனி மேலும் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருக்கவே இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளாதாகவும் ஆஸி. கிரிக்கட் சபை தெரிவிக்கின்றது.
தெற்கு அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த போது சேன் அப்பொட் வீசிய பந்து கழுத்தின் மேல் பகுதியில் பட்டதால் 2 நாட்கள் கோமா நிலையில் இருந்த பின்னர் பில் ஹியூஸ் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
