வீட்டின் மீது விழுந்த பாரிய கருங்கல் (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_463.html
தற்போது நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக ஹியாரே பகுதியில் உள்ள மலை ஒன்றில் இருந்த பாரிய கருங்கல் ஒன்று வீடொன்றின் மீது உருண்டு வந்து விழுந்துள்ளது. இதனால் எவருக்கும் ஆபத்துக்கள் நேரவில்லை எனினும் குறித்த வீடு கடும் சேதத்துக்குள்ளாகியுள்ளது.
வீட்டுக்குப் பின்னால் இருந்து மலையில் சுமார் 880 அடி தூரத்தில் இருந்து இந்தக் கல் உருண்டு வந்து வீட்டின் மீது மோதியுள்ளது. இதன் போது இரண்டு பெரிய கித்துல் மரங்களும் மேலும் பல மரங்களும் உடைந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


