நல்லாட்சியில் ஒரு பகுதி செயற்படவில்லை - வருந்தும் ராஜித
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_210.html
நல்லாட்சியின் ஒரு பகுதி செயற்படாமல் இருப்பது குறித்து கவலையாக உள்ளதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெலே சுதா சிறையில் இருந்தாலும் முக்கிய சுதாக்கள் சிலர் வெளியே தான் உள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க விட்டு விட்டு அவற்றில் தலையிடாமல் இருப்பதே பாரதூரமான விளைவுகளுக்கு வெகுமதியாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை யுத்தத்தில் உயிரிழந்த மக்களே வடக்கில் நினைனவுகூரப்படுகின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதினால் பிரிவினைவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்காது என தெரிவித்த அமைச்சர்,
ஊடகங்களில் செய்தி வெளியிடும் போது அவை திரிபுபடுத்தப்பட்டே வெளியிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
