கோத்தாபயவுக்கு நாம் எந்த அழைப்பும் விடுக்கவில்லை - பொது பல சேனா
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_961.html
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராகபக்சவுக்கு தங்களது அரசியல் முன்னனியில் சேந்து கொள்ளுமான் தம்மில் யாரும் அழைப்பு விடுக்கவில்லை என பொது பல சேனா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்சவுக்கு தாம் அழைப்பு விடுத்ததாகப் பரவிய செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை எனவும் இந்த செய்தியை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அவ்வறிக்கையில்,
"உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு சக்திகள் தமது அமைக்கு எதிராக பல சூழ்ச்சிகளைச் செய்கின்றன எனவும் மன நிலை பாதிக்கப்பட்ட ஊடகங்கள் பொய்யான செய்திகளைப் பரப்புகின்றன. இதற்கு தம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இதனை விட பிச்சை கேட்டு பிழைப்பது நல்லது. ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர்களோ சிறீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களோ தம்முடன் இணையவில்லை. இவை அனைத்தும் அடிப்படையற்ற செய்திகளாகும்."
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
