கோட்டாபய மீதான விசாரணை இன்று..!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று விஷேட விசாரணையொன்றை நடத்தவுள்ளனர்.

இன்று காலை 10.00 மணிக்கு இது தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவை கொள்ளுப்பிட்டியில் உள்ள நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறு கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மிக் விமான கொள்வனவு மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் பங்கு விற்பனை ஆகிய விவகாரங்களின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

2006ம் ஆண்டு உக்ரேனில் இருந்து மிக் ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது நிதிமோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவரூடாக பிரதமர் தலைமையிலான மோசடி ஒழிப்பு ஆணைக் உப குழுவிற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

இந்தநிலையில் அது தொடர்பிலான விசாரணைகள் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியல்கங்காரவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கொள்வனவின் போது 14.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதிதுஸ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ள நிலையில் இக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் டொனல்ட் பெரேராவிடமும் மற்றொரு முன்னாள் விமானப்படை தளபதியான எயா மார்ஷல் ரொஷான் குணத்திலகவிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே இன்றைய தினம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.


Related

Popular 2981335729881755379

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item