மூன்று அனல் மின் நிலையங்கள் மூடப்படும் - சம்பிக்க
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_939.html
மாத்தறை, புத்தளம் மற்றும் எம்பிலிபிட்டிய ஆகிய இடங்களிலுள்ள அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக மினசக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சில் இன்று வியாழக்கிழமை(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை கூறியுள்ளார். அனல் மின் நிலையங்களை செயற்படுத்துவதற்கு கட்டாயமாக வருடமொன்றுக்கு 3,000 – 3,500 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் இது பணத்தை வீணாக்கும் செயல் என வும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
களனிதிஸ்ஸ அனல் மின்நிலையம் மாத்திரம் தொடர்ந்து இயங்கும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
