டுபாய் மெரியட் ஹோட்டல் என்னுடையதல்ல: மஹிந்த

டுபாய் மெரியட் ஹோட்டலின் உரிமை தன்னுடையதல்ல என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

அமெரிக்க டொலர் 4.8 கோடி( 634.03 கோடி ரூபாய்) டுபாய் மெரியட் ஹோட்டலும், அமெரிக்க டொலர் 19 கோடி (2509.71 கோடி ரூபாய்) உருக்கு திணைக்களமும் இந்த ஹோட்டலுக்கு முதலீடு செய்துள்ளது. 

இவ்வாறிருக்கையில் நிதி மோசடி விசாரணை பிரிவு தனக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நந்தன லொக்கு விதான என்ற பெயரில் தான்தான் அந்த ஹோட்டலில் பங்குதாரராக இருப்பதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பொதுத்தேர்தலுக்கு முன்னர், 

இவ்வாறான பிரசாரங்கள் எதிரணியினரால் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Related

Local 3558297568642892410

Post a Comment

emo-but-icon

item