மீண்டும் தமிழக முதல்வராக ஜயலலிதா பதவியேற்றார்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_493.html
சென்னை: தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா 5-வது முறையாக பதவியேற்றார். தமிழக ஆளுநர் ரோசைய்யா ஜெயலலிதாவிற்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அவருடன் 28 அமைச்சர்களும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து பதவியேற்று கொண்டனர். சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், இல. கணேசன், சரத்குமார், தனியரசு, மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, சசிகலா, படத்தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் , நடிகர் ரஜினிகாந்த், நடிகர் பிரபு, சிவகுமார், இசையமைப்பாளர் இளையராஜா, பிசிசிஐ முன்னாள் தலைவர்கள் சீனிவாசன், ஏசி முத்தையா எம்எல்ஏக்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழக அமைச்சர்கள் இரு பிரிவாக பதவி ஏற்றுக் கொண்டனர். முதற்கட்டமாக பன்னீர்செல்வம் உள்பட 12 பேர் அமைச்சர்களாக உறுதிமொழி ஏற்றனர். 2-வது கட்டமாக 14 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
புதிய அமைச்சர்கள் பட்டியல் மற்றும் துறை:
1. ஜெயலலிதா -உள்துறை மற்றும் காவல் துறை
2. பன்னீர்செல்வம்- நிதி துறை, பொதுப் பணித்துறை
3. நத்தம் விஸ்வநாதன்- மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை
4. வைத்திலிங்கம் - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் வேளாண் துறை
5. எடப்பாடி பழனிச்சாமி- நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை மற்றும் வனத்துறை
6. மோகன் - ஊரகத் தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத் துறை
7. வளர்மதி - சமூகநலத் துறை மற்றும் சத்துணவு திட்டத் துறை
8. பழனியப்பன் - உயர்கல்வித் துறை
9. செல்லூர் ராஜூ - கூட்டுறவுத் துறை
10. காமராஜ் - உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை
11. தங்கமணி - தொழில் துறை
12. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத் துறை
13. எம்.சி.சம்பத்- வணிகவரி மற்றும் பதிவுத் துறை
14. வேலுமணி- நகராட்சி நிர்வாகம், சட்டம் மற்றும் உள்ளாட்சித் துறை
15. சின்னையா- கால்நடைத் துறை
16. கோகுலஇந்திரா- கைத்தறி மற்றும் ஜவுளி துறை
17. சுந்தர்ராஜ்- விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்
18. சண்முகநாதன்- சுற்றுலாத் துறை
19. என். சுப்ரமணியன்- ஆதிதிராவிடர் நலத் துறை
20. ஜெயபால்- மீன்வளத் துறை
21. முக்கூர் என். சுப்ரமணியன்- தகவல் தொழில்நுட்பத் துறை
22. உதயகுமார்- வருவாய்த் துறை
23. ராஜேந்திர பாலாஜி- செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறை
24. பி.வி.ரமணா- பால்வளத் துறை
25. கே.சி.வீரமணி- பள்ளிக்கல்வித் துறை
26. தோப்பு வெங்கடாசலம்- சுற்றுசூழல்த் துறை
27. பூனாட்சி- கதர் மற்றும் கிராமத் தொழில் துறை
28. அப்துல்ரஹீம்- பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை
29. விஜயபாஸ்கர்- சுகாதாரத்துறை துறை
