இன்றைய தினமும் கடும் மழை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_916.html
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினமும் கடுமையான மழையை எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. சில இடங்களில் 100 மி.மி. க்கு அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள கரையோரப் பகுதிகளில் அதிக மழை கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அந்நேரம் கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
