புதிய தேர்தல் முறைக்கு அனுமதி வழங்குவதை ஒரு வாரத்தால் தள்ளி வைத்தது கபினட்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_913.html
புதிய தேர்தல் முறைக்கு அனுமதி அளிக்கும் செயற்பாட்டை ஒரு வாரத்தால் பிற்போட அமைச்சரவை நேற்றிரவு தீர்மானித்துள்ளது. புதிய தேர்தல் முறை பற்றிய யோசனை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மைக் கட்சிகளால் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை மீண்டும் ஆராய்ந்து புதிய தேர்தல் முறையினை சீர்செய்யவென ஜனாதிபதியால் ஒரு கபினர் உப குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்குழுவில் சரத் அமுனுகம, லக்ஷ்மன் கிரியல்ல, சம்பிக்க ரணவக்க, எஸ்.பீ. திஸ்ஸானாயக்க, ரவூப் ஹகீம் மற்றும் பீ.திகாம்பரம் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
