இலங்கையிலும் பாரியதொரு நில அதிர்வு ஏற்படலாம்?

இலங்கையில் எதிர்காலத்தில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்து – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள மாற்றமே இவ்வாறு இலங்கையில் நில நடுக்கம் ஏற்பட காரணமாக அமையும். இலங்கைக்கு 500 முதல் 700 கிலோ மீற்றர் தொலைவில் இந்த புதிய பூமித் தட்டுப்பகுதி காணப்படுகின்றது. 

50 மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமித்தட்டுக்கள் நகரத் தொடங்கியுள்ளன. இந்து – அவுஸ்திரேலிய பூமித் தட்டு ஏற்கனவே வெடிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் மண்சரிவுகள் ஏற்படவும் இது ஏதுவாக அமையும். நேபாள நிலநடுக்கத்தினால் இந்தியாவிற்கு உள்ளக அதிர்வுகள் ஏற்பட்டு அது இலங்கையை பாதிக்கலாம். 

எதிர்காலத்தில் இலங்கையில் மண்சரிவு சம்பவங்கள் அதிகரிக்கக் கூடும். இலங்கையில் பூமியதிர்வு ஏற்படாது என நாம் நிம்மதியாக இருக்க முடியாது. ஏனென்றால் கடந்த காலங்கயில் இலங்கையில் பாரியளவு நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 1615ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி இடம்பெற்ற நில நடுக்கத்தில் கொழும்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டதுடன், பாரியளவில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 

போர்த்துக்களில் இது பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன. 2012ம் ஆண்டு இந்து – அவுஸ்திரேலிய பூமியோட்டில் அதிர்வு ஏற்பட்டது. எதிர்காலத்தில் இலங்கையில் நில நடுக்கம் ஏற்படக் கூடும். நில நடுக்கத்தினை எதிர்நோக்க தற்போது இருந்தே ஆயத்தமாக வேண்டுமென புவியியல் நிபுணர் பேராசிரியர் சீ.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


Related

Local 2334875140002474249

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item