சஜின் கொழும்புக் கோட்டை நீதிமன்றத்தில் - பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_442.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளரான சஜின் வாஸ் குணவர்தன சற்று முன்னர் கொழும்புக் கோட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நாய்கள் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வெடி பொருட்களைத் தேடும் விஷேட படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
