வெட்கம் இருந்தால் மஹிந்த மைத்திரியிடம் வந்திருக்கமாட்டார் - பொன்சேகா
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_901.html
மஹிந்த ராஜபக்சவுக்கு முதுகெலும்பில் பலம் இருந்தால், அதில் ஒரு எலும்பிலேனும் வெட்கம் என்பது சிறிதளவேனும் இருந்தால் இவ்வாறு வெட்கம் கெட்ட விதத்தில் போய் தனக்கு பிரதமர் பதவியைத் தாருங்கள் எனக் கேட்டிருக்கமாட்டார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிரிசேன ஒரு கைக் குழந்தை என நினைத்து விட்டார் மஹிந்த எனவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு அவருக்கு பிரதமர் பதவி கொடுத்தால் ஜனாதிபதி கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை தான் ஏற்படும். அவர் மீண்டும் தலை தூக்க நாம் இடமளியோம்.
அத்துடன் நாட்டை மீண்டும் படு பாதாளத்துக்குத் தள்ள அனுமதிக்க மாட்டோம் எனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
