பாகிஸ்தானில் ஹலிகொப்டர் விபத்தில் முக்கியஸ்தர்கள் உட்பட 6 பேர் பலி (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2015/05/6_8.html
நோர்வே, பிலிப்பைன்ஸ் நாட்டு தூதுவர்கள் உட்பட சிலர் பயனித்த ஹலிகொப்டர் ஒன்று பாகிஸ்தானில் கில்கிட் பகுதியில் விபத்தில்சிக்கியதால் 6 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்குறித்த இரானுவ ஹலிகொப்டரில் மொத்தம் 11 வெளிநாட்டவர்கள் மற்றறும் 6 பாகிஸ்தானியர்கள் உடன் பயணித்துள்ளனர்.
பாகிஸ்தானில் கில்கிட் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் பயனித்துக்கொண்டிருக்கும் போது திடீர் என பள்ளிக்கட்டடம் ஒன்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் நோர்வே நாட்டு தூதுவர், பலிபைன்ஸ் நாட்டு தூதுவர், மலேசியா, இந்தோநேசியா நாட்டு தூதுவர்களின் மனைவிமார் உற்பட இரண்டு இரானுவ விமானிகள் என மொத்தம் 6 பேர் பலியாகியுள்ளனர்.



